தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்கள் சிலர் வெளியிட்ட கருத்துகளைத் தவறாகச் சித்தரித்து, அவர்களை இழிவாக விமர்சித்ததாகப் பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது கடும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நேரில் புகார் அளித்த த.வெ.க தலைவர் விஜய், தமிழ்ப் பண்பாட்டில் போற்றுதலுக்குரிய பெண்களைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பொன்ராஜ் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் ஆளுங்கட்சியின் அரவணைப்பில் இருப்பதால் அநாகரிகமாகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பொன்ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், பொதுவெளியில் கலாச்சாரச் சீர்கேட்டை உருவாக்கும் வகையில் பேசிய சிலரை மட்டுமே தான் விமர்சித்ததாகவும், ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவுபடுத்தும் நோக்கம் தனக்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் திமுக மீது பழி போடுவதாகவும், தனது குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்காத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள். உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாம் கேட்ட உங்க கட்சி கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டுச் சென்றதிற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள். இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என்னுடைய சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான் எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன். எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
