ஏவுகணையில் “Thank You India”… உலகையே அதிர வைத்த ஈரானின் அந்த வைரல் புகைப்படம்… பின்னணி என்ன.??

By Soundarya on பங்குனி 27, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது 83-வது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ‘இந்திய மக்களுக்கு நன்றி’ (Thank You India) என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி ஜெர்மனி, பாகிஸ்தான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரானிய விண்வெளிப் படை (Aerospace Force) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தங்களுக்கு ஆதரவாகவும் ஒருமைப்பாட்டுடனும் நிற்கும் நாடுகளுக்குத் தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக ஈரான் இத்தகைய வினோதமான உத்தியைக் கையாண்டுள்ளது. ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4’ (Operation True Promise 4) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) அறிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியா போன்ற ‘நட்பு நாடுகளின்’ வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.