ஓமனின் பர்கா பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், கார் ஒன்று சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்தக் காரினுள் இரண்டு இந்தியர்கள் உயிருக்குத் தவித்துக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த பாகிஸ்தான் இளைஞர் ஷேஷாத் கான் சற்றும் யோசிக்காமல் சீறிப்பாய்ந்த வெள்ள நீரில் குதித்தார். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் செயல்பட்ட அவர், போராடி கார் கதவைத் திறந்து அதிலிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தார்.
Video of 25 year old Pakistani Shahzad Khan rescuing Indians trapped in a flood in Barka, Oman. pic.twitter.com/dDRMDjBqYf
— Taimoor Zaman (@taimoor_ze) March 25, 2026
நாடுகளுக்கு இடையிலான எல்லைகளைக் கடந்து, சக மனிதர்களின் உயிரைக் காக்க அந்த இளைஞர் காட்டிய இந்த மனிதாபிமானச் செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. இந்த வீரதீரச் செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “மனிதாபிமானத்திற்கு மொழியோ, தேசமோ கிடையாது” என்று உலகெங்கிலும் உள்ள மக்கள் அந்த இளைஞரைப் பாராட்டி வருகின்றனர்.
