“உயிர் பிழைத்தால் போதும் சாமி”… மனைவி செல்போனில் இருந்த அந்த செய்தி… கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்… நடுங்க வைக்கும் ‘நீல நிற டிரம்’ மர்மம்…!!

By Muthu Mani on பங்குனி 26, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் தௌலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார், தனது மனைவியுடன் ஏழு ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்துவந்தார். இவர்களுக்கு 6 மாதக் குழந்தை ஒன்று உள்ள நிலையில், அடிக்கடி ஏற்படும் குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி யாரிடமும் சொல்லாமல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெளியே சென்று தங்கிவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார், தனது மனைவியைத் தீவிரமாகக் கண்காணித்தபோது, அவருக்குத் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதை உறுதி செய்தார்.

ஒருமுறை தனது கள்ளக்காதலனுடன் மனைவி ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, ராஜ்குமார் அவரது செல்போனைப் பறித்துச் சோதனை செய்தார். அதில் ஏராளமான ஆபாசப் படங்களும், கடந்த ஆண்டு மீரட்டில் முஸ்கான் என்ற பெண் தனது கணவனைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் தொட்டியில் அடைத்த அதிர்ச்சிகரமான செய்திகளும் இருந்தன. அந்தச் செய்திகளைத் தனது மனைவி மீண்டும் மீண்டும் வாசித்திருப்பதைக்கண்டு ராஜ்குமார் மிரண்டுபோனார். இது குறித்துக் கேட்டபோது, மனைவியின் உடல்மொழி தன்னை அவர் கொலை செய்யத் திட்டமிடுகிறாரோ என்ற பேரச்சத்தை ராஜ்குமாருக்கு ஏற்படுத்தியது.

   

இந்த விவகாரம் மகளிர் சமரசப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு வந்த மனைவியின் கள்ளக்காதலன் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தனது கணவனுடன் வாழ விருப்பமில்லை என்றும், காதலனுடன் செல்லவே விரும்புவதாகவும் அந்தப் பெண் உறுதியாகத் தெரிவித்தார். தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்த ராஜ்குமார், தனது பாதுகாப்பைக் கருதி மனைவியின் முடிவுக்குச் சம்மதித்து அவரை காதலனுடன் அனுப்பி வைத்தார்.