குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி காசிபாவின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது. வதோதராவில் உள்ள புகழ்பெற்ற மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் கவின் கலைப் பீடத்திற்கு அருகில் ஒரு சிறிய தேநீர்க் கடையை நடத்தி வரும் இவர், இந்தத் தள்ளாத வயதிலும் யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் சாக்ஷி சிங் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோவில், நடுங்கும் கைகளுடனும் முகத்தில் புன்னகையுடனும் காசிபா இஞ்சி தட்டி தேநீர் தயாரிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்கின்றன. வயதான காலத்தில் மற்றவர்களின் துணையை எதிர்பாராமல், அதிகாலையிலேயே தனது வேலையைத் தொடங்கிவிடும் காசிபாவின் மன உறுதி, இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த பாடமாகும்.
View this post on Instagram
“>
இதனால் வறுமையும் வயோதிகமும் அவரது உடலைத் தளர்த்தினாலும், அவரது உழைக்கும் ஆர்வத்தை மட்டும் குறைக்கவில்லை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. “நேரம் அவரைப் பணிய வைத்திருக்கலாம், ஆனால் அவரது உறுதியை ஒருபோதும் உடைக்கவில்லை” என்று பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ, லட்சக்கணக்கான இதயங்களை வென்றுள்ளதுடன், கடின உழைப்பிற்கு வயது ஒரு தடையல்ல என்பதையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.
