10-ஆம் வகுப்பு தேர்ச்சியா?… “மத்திய ஆயுத காவல் படையில் 827 காலியிடங்கள்”… மாதம் ₹69,000 சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Muthu Mani on பங்குனி 25, 2026

Spread the love

இந்திய நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளைப் பாதுகாக்கும் சசிர சீமா பல் (SSB) அமைப்பில், காலியாக உள்ள 827 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநர் (553 இடங்கள்), சலவையாளர், தையல்காரர், தோட்டக்காரர் மற்றும் நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாளர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், அந்தந்தப் பணிகளுக்குத் தேவையான அனுபவம் அல்லது ITI சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, ஓட்டுநர் பணிக்கு கனரக வாகன உரிமமும், நர்சிங் உதவியாளர் பணிக்கு முதலுதவி சான்றிதழும் கட்டாயமாகும்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் (பதவி வாரியாக வயது வரம்பு மாறுபடும்), மேலும் அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் உடல் தகுதித் தேர்வு (PET), கணினி வழித் தேர்வு (CBT), திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

   

ஆர்வமுள்ளவர்கள் https://ssb.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும்; பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்குக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் 20.04.2026 ஆகும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து விவரங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.