டிவி சத்தத்தை அதிகரித்த தந்தை… அலறல் சத்தம் கேட்காமல் இருக்க ‘ப்ளூ பிலிம்… தந்தையின் வக்கிரத்தால் சீரழிந்த 17 வயது சிறுமி… உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

By Rajeshwari on பங்குனி 24, 2026

Spread the love

குஜராத் மாநிலத்தில் தந்தை ஒருவரால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்காமல் இருப்பதற்காக, அந்த நபர் ஆபாசப் படங்களை அதிக ஒலியுடன் ஒலிக்கச் செய்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போது 17 வயதாகும் அந்தச் சிறுமி, தனது தந்தையின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையினர் அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்த இந்த அநீதியால் அந்தச் சிறுமி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.

   

இந்நிலையில் ஒரு தந்தையே தன் மகளுக்கு இத்தகைய கொடுமையை இழைத்தது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.