கேப்டன் கோட்டையில் பிரேமலதா?… 2026-ல் அண்ணியார் களமிறங்கும் தொகுதி…. தேமுதிக-வின் ‘மாஸ்டர் பிளான்’ ரகசியம் உடைந்தது…!

By Nanthini on பங்குனி 24, 2026

Spread the love

தமிழகத்தின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தேமுதிக இப்போதே தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் மறைந்த கேப்டன் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலம் தொகுதியிலும், விஜய பிரபாகரன் தென் தமிழகத்தில் செல்வாக்குள்ள சாத்தூர் அல்லது விருதுநகர் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் ஒருமனதாக வலியுறுத்தினர்.

தொண்டர்களின் இந்த விருப்பத்திற்குப் பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகக் கூறப்படுவதால், எதிர்வரும் தேர்தலில் தேமுதிகவின் இந்த “வாரிசு அரசியல்” நகர்வு அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.