இந்த ஸ்கூட்டரை தொடாதீங்க…! கர்நாடகாவில் ஒரு சுஸுகி ஆக்சஸ் ஸ்கூட்டர் இத்தனை நாட்களாக ஏன் நகரவில்லை தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on பங்குனி 24, 2026

Spread the love

கருணைக்கும் அன்புக்கும் பெயர்பெற்ற கர்நாடக மாநிலத்தில், மனிதநேயத்தைப் பறைசாற்றும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ‘சுஸுகி ஆக்சஸ்’ ஸ்கூட்டரில் பறவை ஒன்று கூடு கட்டி, முட்டையிட்டுத் தன் குஞ்சுகளைப் பொரித்திருந்தது.

மேலும் பொதுவாக வாகனங்கள் நமக்கு அன்றாடத் தேவையாக இருந்தாலும், அந்த வாகனத்தின் உரிமையாளர் தனது சௌகரியத்தை விட அந்தச் சிறு உயிர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தார். அந்தப் பறவைக் குஞ்சுகள் தானாகப் பறந்து செல்லும் வரை, பல நாட்களாகத் தனது வாகனத்தை அவர் தொடவே இல்லை.

   

“>

   

இதனால் இயற்கையோடு இணைந்த இந்த மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இயந்திரத்தனமான இந்த உலகில், ஒரு சிறு பறவைக்காகத் தனது வாகனத்தைப் பயன்படுத்தாமல் தியாகம் செய்த அந்த உரிமையாளரின் செயல், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வரிகளை நினைவுபடுத்துகிறது.

 

இந்நிலையில் அந்தப் பிஞ்சுப் பறவைகள் வானில் சிறகடித்துப் பறக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்த அவரது அன்பு, மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையிலான பிணைப்பை மீண்டும் ஒருமுறை அழகாக மெய்ப்பித்துள்ளது.