தானே ரயில் நிலையத்தில் முதியவர்களிடமும், இளம் பெண்ணிடமும் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒரு நபரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் தொடங்கிய அந்த நபரின் அத்துமீறல், அவர்கள் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்தது அதிர்ச்சியை அளிக்கிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கிருந்த காவல்துறையினரிடம் முறையிட்டும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சட்டத்தின் துணை கிடைக்காத நிலையில், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தப் பெண்களும், அங்கு திரண்டிருந்த இளைஞர்களும் இணைந்து அந்த நபருக்கு தகுந்த பாடம் புகட்டினர்.
A peaceful community man was abusing an elderly couple and molesting a girl in the train.
When they got off at Thane station, he followed them, police allegedly did nothing when the girls complained.
Finally, the girls and some other youths teamed up and beat him up. pic.twitter.com/ED1ZQEFns9
— Team Hindu United (@TeamHinduUnited) March 23, 2026
“>
இதனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஒரு தரப்பினர் “சட்டம் கையில் எடுக்கப்படக்கூடாது” என்று கூறினாலும், ஆபத்துக் காலத்தில் காவல்துறை உதவாதபோது தற்காப்புக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே பலரது வாதமாக இருக்கிறது.
இந்நிலையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும், புகார்கள் வரும்போது காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதும் இது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
