“அனுப்பிய 15 நிமிஷத்துல காணாம போயிடும்…” வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம்… மெட்டா நிறுவனத்தின் மாஸ் பிளான்…!!

By Devi Ramu on பங்குனி 23, 2026

Spread the love

வாட்ஸ்அப் செயலி தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘டிஸ்பியரிங் மெசேஜ்’ அம்சத்தில் 15 நிமிடங்கள் என்ற புதிய கால அளவை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 24 மணிநேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் ஆகிய தேர்வுகளுடன், இந்த மிகக் குறுகிய கால அவகாசமும் விரைவில் இணையவுள்ளது. இதன் மூலம் ரகசிய குறியீடுகள், தனிப்பட்ட புகைப்படங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களிலேயே தானாகவே அழிந்துவிடும் என்பதால், தகவல்கள் கசியும் அபாயம் பெருமளவு குறையும்.

மெட்டா நிறுவனம் தற்போது இந்த வசதியை பீட்டா (Beta) பதிப்பு பயனர்களிடம் சோதனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், உலகெங்கிலும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும். இது செல்போனின் சேமிப்பு இடத்தைச் சேமிப்பதுடன், தேவையற்ற உரையாடல்களை ஒவ்வொன்றாக நீக்கும் சிரமத்தையும் குறைக்கும். டிஜிட்டல் உலகில் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை விரும்புவோருக்கு இந்த 15 நிமிட டைமர் வசதி ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.