தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,240 சரிவடைந்து, நகை வாங்குவோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.12,670 என்ற விலையில் விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் கணிசமான அளவு குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
