“அந்த சிரிப்பை பாருங்க…” ஆபத்தை அறியாமல் ஈ-ரிக்‌ஷாவில் தொங்கி செல்லும் மாணவர்கள்… ஓட்டுனரின் அலட்சியம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

By Devi Ramu on பங்குனி 23, 2026

Spread the love

மின்சார ரிக்‌ஷாவில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி, அபாயகரமான முறையில் அதிவேகமாகச் செல்வது மிகப்பெரிய விபத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய சூழலில் விபத்து நேரிட்டால், முதல் பொறுப்பு அந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுநரையேச் சாரும். ஏனெனில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவரது கடமையாகும். மேலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத வாகனங்களில் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களும், விதிமுறைகளை மீறிச் செயல்படும் வாகனங்களைக் கண்காணிக்கத் தவறிய போக்குவரத்து காவல்துறையினரும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

முறையான உரிமம் இன்றி வாகனத்தை இயக்குவது மற்றும் தகுதியற்ற வாகனங்களில் குழந்தைகளை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் ஒரு ரிக்ஷாவில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. சம்மந்தப்பட்ட ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.