எலுமிச்சை பழம் கிடைத்தால் தான் MLA சீட்… சாமி சொல்லும் அருள்வாக்கு… ரங்கசாமியின் ஆன்மீக வேட்பாளர் தேர்வு..!!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

2011-ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டது முதல் என்.ஆர்.காங்கிரஸில் விருப்ப மனுக்கள் வாங்கும் நடைமுறையே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்கள் மனுக்களை ‘அப்பா பைத்தியம் சாமி’ கோவிலுக்குக் கொண்டு வருவார்கள். அங்கு ரங்கசாமியே நேரடியாகப் பூஜைகளை நடத்தி, சாமியின் காதில் ரகசியமாகப் பேசிவிட்டு இறைவனின் உத்தரவுக்காகக் காத்திருப்பார்.

இந்த வினோத நடைமுறையின்படி, சாமிக்குச் சிறப்புப் பூஜைகள் முடிந்த பிறகு ரங்கசாமிக்கு ‘அருள்வாக்கு’ கிடைப்பதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் கோவிலில் இருந்து வெளியே வந்து, அங்கு காத்திருக்கும் நபர்களில் யாரிடம் எலுமிச்சை பழத்தைத் தருகிறாரோ, அவரே அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

   

அரசியலில் மக்களாட்சி முறைகள் பின்பற்றப்படும் நிலையில், ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் ரங்கசாமியின் இந்தத் தனித்துவமான பாணி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.