வாழ்நாள் முழுவதும் இணைபிரியாமல் வாழ்ந்த தன் வாழ்க்கைத் துணையை இழந்த ஒரு முதியவர், மயானத்தில் தன் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. வாழ்க்கையின் கசப்பான உண்மையை உணர்த்தும் இந்தப் படம், ஒரு முதிய கணவர் தனது அன்பு மனைவிக்கு இறுதி விடை கொடுக்கும்போது, தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பதைக் காட்டுகிறது. தள்ளாத வயதிலும் மாறாத அந்த அன்பு, உண்மையான பாசத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.
किसी को दर्द जानना है तो इस दादा के दर्द से समझो पत्नी के वियोग में घाट पर रो रहे हैं
☠️श्मशान घाट पर💀 छलका बुजुर्ग पति का दर्द, जीवनसाथी के बिछड़ने की तस्वीर ने हर दिल को झकझोर दिया श्मशान घाट से सामने आई यह तस्वीर इंसान के जीवन की सबसे कड़वी सच्चाई बयां करती है। एक बुजुर्ग… pic.twitter.com/f4CPtj5vXN— premprakash (@pp73030711) March 22, 2026
இன்றைய நவீன உலகில், மிகச் சிறிய காரணங்களுக்காகவும், ஈகோ பிரச்சினைகளுக்காகவும் எளிதாக விவாகரத்து பெற்றுப் பிரிந்து செல்லும் தம்பதிகளுக்கு, இந்த முதியவரின் கண்ணீர் ஒரு மாபெரும் பாடமாக அமைந்துள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, முதுமை வரை அன்பு பாராட்டி வாழ்வதே வாழ்வின் அர்த்தம் என்பதை அந்த மயானக் காட்சி உலகிற்கு உரக்கச் சொல்கிறது. காலம் மாறினாலும், உண்மையான காதலும் பிணைப்பும் என்றுமே மாறாது என்பதற்கு இந்த முதியவரே சாட்சி.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் புகைப்படம், பார்ப்பவர் எவரையும் ஒரு நிமிடம் கண் கலங்கச் செய்கிறது. அந்த முதியவரின் வலியில் பொதிந்துள்ள தூய்மையான அன்பைப் பார்த்து, “காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒரு வாழ்நாள் அர்ப்பணிப்பு” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்கால உறவுகளில் விரிசல் ஏற்படும் சூழலில், இந்த முதியவரின் மனிதாபிமானமிக்க அன்பு அனைவரது மனசாட்சியையும் ஒருமுறை தட்டிப் பார்க்கிறது.
