சென்னையில் இன்று (மார்ச் 22) செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தமிழக அரசியலில் தனது புதிய பயணத்தை அறிவித்தார். “அண்ணா வளர்ச்சி கழகம்” (AVK) என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகவும், வரும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலினே மீண்டும் வருவார் என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலில் தனது ஆதரவு திமுகவுக்கே என்பதைத் தெளிவுபடுத்தினார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், வரும் காலத்தில் போட்டி என்பது இரண்டு முக்கிய தரப்புகளுக்கு இடையேதான் இருக்கும் என்று சுட்டிக்காட்டினார். “ஒன்று TVK (தமிழக வெற்றிக் கழகம்), இன்னொன்று எனது AVK” என்று நகைச்சுவை கலந்த தனது பாணியில் அவர் கூறினார். இந்த ஆண்டு திமுகவுக்கு ஆதரவளித்தாலும், அடுத்த தேர்தலில் தனது கட்சி ஒரு முக்கிய சக்தியாகப் போட்டியிடும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
