BREAKING: SC/ST ஆணையத் தலைவர் தமிழ்வாணன் காலமானார்… பெரும் சோகம்..!!

By Soundarya on பங்குனி 22, 2026

Spread the love

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி (SC/ST) ஆணையத் தலைவருமான பி. தமிழ்வாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். தனது பணிக்காலத்தில் ஐடி ஊழியர் கவினின் ஆணவப் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரும்பாடுபட்டவர் இவர்.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இவர், அடித்தட்டு மக்களுக்கான நாயகனாகத் திகழ்ந்தார். இவரது மறைவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.