பக்கோடா சுடப்போய் வந்த விபரீதம்… அக்காவுடன் ஏற்பட்ட தகராறில் தங்கை செஞ்ச காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on பங்குனி 22, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், விரதத்தின் போது பலகாரம் செய்வதில் ஏற்பட்ட சிறு தகராறு ஒரு இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரீட்சித்கர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த லக்ஷ்மி என்ற பெண், தனது சகோதரியுடன் ‘குட்டு’ மாவு பக்கோடா செய்வதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த லக்ஷ்மி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மாத்திரையைத் திடீரென உட்கொண்டார். மயக்கமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தாய் கூலி வேலை செய்து தனது ஏழு மகள்கள் மற்றும் ஒரு மகனை வளர்த்து வந்துள்ளார். சாதாரண ஒரு வீட்டு வேலைக்காக ஏற்பட்ட கோபம், அந்த ஏழ்மையான குடும்பத்தில் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகம் நிலவுகிறது. அற்பமான காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவது மிகுந்த வேதனையை அளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.