“திருடனுக்கே டஃப் கொடுப்பார் போல இருக்கே”… பேங்க் லாக்கர் இனி தேவையில்லை?… தங்கத்தை இப்படி கூட பாதுகாக்கலாமா?.. வைரல் வீடியோ..!!!

By Rajeshwari on பங்குனி 22, 2026

Spread the love

வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தைத் திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக மறைத்து வைக்க ஒரு பெண் கையாண்ட நூதனமான முறை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக விலைமதிப்பற்ற பொருட்களை லாக்கர்களில் வைப்பது வழக்கம் என்றாலும், ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் நகை மற்றும் பணத்தைப் போட்டு, அதை ஒரு சாதாரண காய்கறிப் பை போலத் தோற்றமளிக்கச் செய்து, ஜன்னல் திரையின் வளையங்களுக்குப் பின்னால் மறைத்து தொங்கவிடும் நுட்பத்தை அந்தப் பெண் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.

மேலும் திருடர்களின் கவனம் எளிதில் செல்லாத இடங்களைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானது என்ற நோக்கில் இந்த  நுட்பம் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய உத்திகளைப் பொதுவெளியில் பகிர்வது திருடர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதில் உள்ள ஆபத்துகளையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Shipra Rai (@shiprarai2000)

   

“>

 

இதனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் இது போன்ற யோசனைகள் பார்ப்பதற்கு புத்திசாலித்தனமாகத் தெரிந்தாலும், அதிக மதிப்புள்ள தங்க நகைகளை இது போன்ற தற்காலிக இடங்களில் வைப்பது பாதுகாப்பானது அல்ல என்றும், வங்கி லாக்கர்களே சிறந்த வழி என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பாதுகாப்பிற்காகச் செய்யப்படும் இத்தகைய புதுமையான முயற்சிகள் ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதையே இந்த வீடியோ உணர்த்துகிறது.