EPS-க்கு பேய் பிடிச்சிருச்சு… அங்கிட்டும் இங்கிட்டும் தலையை பிச்சிகிட்டு ஓடுறாரு… ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்…!!

By Soundarya on பங்குனி 22, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாகச் சாடினார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான முதல்வர்கள் என்றும், தானும் எடப்பாடி பழனிசாமியும் அந்தந்த காலக்கட்டச் சூழலால் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று பதவி பெற்றவர் என விமர்சித்த அவர், தன்னை பதவியில் அமர்த்தியவர்களுக்கே விசுவாசமாக இல்லாதவர் மக்களுக்கு எப்படி உண்மையாக இருப்பார் எனக் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவின் தற்போதைய நிலையை விமர்சித்த ஓபிஎஸ், அக்கட்சி சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஆர்.பி. உதயகுமார் போன்றவர்களை நம்பி இருப்பதாகவும், இவர்களை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்றும் கிண்டலடித்தார். எடப்பாடி பழனிசாமி தற்போது பேய் பிடித்தவரைப் போல நிலைகுலைந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறிய அவர், வரவிருக்கும் தேர்தலுக்காக நடிகர் விஜய் வீட்டு வாசலில் கூட்டணி கேட்டு நின்றதாகவும், ஆனால் விஜய் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் ஒரு புதிய தகவலைப் பகிர்ந்து அதிர வைத்தார்.

   

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்ததையும், 14 இடங்களில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியும் உதயகுமாரும் இணைந்து அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இவர்களின் செயல்பாடுகளால் கட்சி அதன் செல்வாக்கை முற்றிலும் இழந்துவிட்டதாகவும், இனி மீண்டெழுவது கடினம் என்பது போன்ற தொனியில் அவரது பேச்சு அமைந்திருந்தது. திமுக மேடையில் அமர்ந்து கொண்டு அதிமுகவின் உட்கட்சிப் பூசல்களை அவர் வெளிப்படையாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.