NDA-வில் இணையும் சின்னம்மா.? திமுகவை வீழ்த்த தினகரன் காட்டும் ‘கிரீன் சிக்னல்’… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, புதிய கூட்டணிக் கணக்குகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. அண்மையில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், வரும் தேர்தலை இருவரும் இணைந்து சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

 இந்தச் சூழலில், சசிகலா தலைமையிலான அணி பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் நீடித்து வரும் நிலையில், சசிகலாவின் இந்த புதிய அரசியல் நகர்வு குறித்தும், அவருடன் இணைந்து செயல்படுவது குறித்தும் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

   

இதற்குப் பதிலளித்த டிடிவி தினகரன், “எங்களது முக்கிய இலக்கு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) தோற்கடிப்பது தான். அதற்காக அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுவோம்” என்று தெரிவித்தார். அதேசமயம், சசிகலாவிடம் தாங்கள் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கூட்டணி முயற்சியையும் எடுக்கவில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார்.

   

சசிகலா மற்றும் ராமதாஸின் இந்த அதிரடி கூட்டணி அறிவிப்பு, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளுக்கும் சவாலாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க இந்த இரண்டு சமூகத் தலைமைகளும் இணைந்திருப்பது தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.