பீர் பாட்டில் விலை ஏறப்போகுது…! ஈரான் போர் பதற்றத்தால் வந்த புதுத் தலைவலி… பின்னணி என்ன…?

By Devi Ramu on பங்குனி 21, 2026

Spread the love

சர்வதேசச் சந்தையில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பீர் விலை விரைவில் உயரவுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 103 டாலராக அதிகரித்துள்ளது. இதனால் பீர் தயாரிப்புக்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளதோடு, போக்குவரத்துச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் பப் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்த விலை உயர்வு இன்னும் சில வாரங்களில் சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எதிரொலிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் ஒருவாறு சமாளித்தாலும், குறைந்த லாபத்தில் இயங்கும் சிறிய மதுபான விடுதிகள் மற்றும் உள்ளூர் பீர் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பல சிறிய பார்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து மதுபான விலையும் ஏறுவது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.