அமித்ஷாவையே அதிரவைத்த எடப்பாடி…. 2029-ஐ காட்டி 174 தொகுதிகளை தட்டித் தூக்கிய ‘மாஸ்டர் பிளான்’…. அதிர்ச்சியில் அறிவாலயம்…!

By Nanthini on பங்குனி 21, 2026

Spread the love

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியை உடைக்க, 2029 மக்களவைத் தேர்தலை ஒரு துருப்புச் சீட்டாக எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தியுள்ளார். கடந்த கால அனுபவங்களைச் சுட்டிக்காட்டி, தற்போதைய சூழலில் அதிமுக பலமாக இருந்தால்தான் எதிர்காலத்தில் பாஜகவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அமித்ஷாவிடம் அவர் தர்க்கரீதியாக விளக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமாக, அதிமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 174 தொகுதிகளில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் நேரடியாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது. பாஜகவுக்கு கடந்த முறையை விட கூடுதலாக 5 இடங்கள் (மொத்தம் 25) வழங்க முன்வந்துள்ள எடப்பாடி பழனிசாமி, பாமகவுக்கு ஏற்கனவே 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களையும் முறைப்படுத்தி, சிறிய கட்சிகளை இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைக்கும் வியூகத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

   

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயல் மூலம் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளைத் தாண்டி, நேரடியாக அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தியது அவருக்குச் சாதகமாக முடிந்துள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமடைந்துள்ளனர். “இப்போது எங்களுக்கு வழிவிடுங்கள், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்குகிறோம்” என்ற எடப்பாடியின் வாக்குறுதி, அமித்ஷாவைச் சமாதானப்படுத்தியதாகத் தெரிகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அதிமுகவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

   

இந்த உடன்பாட்டின்படி, வரும் மார்ச் 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற சிறிய கட்சிகளைத் தொகுதிப் பங்கீட்டிற்குச் சம்மதிக்க வைக்கும் பொறுப்பை பாஜகவிடமே எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்துவிட்டதாகவும், இதன் மூலம் அதிமுக தனது பெரும்பான்மை பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.