CM ஆகும் சீமான்…? “நாதக செய்த அந்த ஒரு சம்பவம்” காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்… கதிகலங்கும் அரசியல் கட்சியினர்..!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இலவசங்கள் மற்றும் தற்காலிகத் தீர்வுகளைத் தவிர்த்து, நீண்டகாலக் கட்டமைப்பு மாற்றங்களை மையமாக வைத்து இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, “மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்” என்ற முழக்கத்துடன் அவர் முன்வைத்துள்ள தொலைநோக்குத் திட்டங்கள், வழக்கமான அரசியல் பாணியிலிருந்து மாறுபட்டு இளைஞர்கள் மற்றும் பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த அறிக்கையின் மிக முக்கிய அம்சமாக, தமிழகத்திற்கு ஐந்து தலைநகரங்கள் என்ற திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. நிர்வாகத் தலைநகராகத் திருச்சியும், தொழில்நுட்பத் தலைநகராகச் சென்னையும், வணிகத் தலைநகராகக் கோயம்புத்தூரும், பண்பாட்டுத் தலைநகராக மதுரையும், அறிவுசார் தலைநகராகக் கன்னியாகுமரியும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மையை அரசுப் பணியாக மாற்றி, விவசாயிகளுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அந்தஸ்து மற்றும் ஊதியம் வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதி விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

கல்வி மற்றும் மருத்துவத்தில் சமத்துவத்தைக் கொண்டுவரும் நோக்கில், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பிள்ளைகள் கட்டாயம் அரசுப் பள்ளிகளில் பயில வேண்டும் என்றும், அவர்கள் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார். இம்முறையும் 117 பெண்கள் மற்றும் 117 ஆண்கள் எனச் சமமான இடஒதுக்கீட்டை வேட்பாளர் தேர்வில் கடைப்பிடிப்பதுடன், ஊழலற்ற மற்றும் மதுவற்ற புதிய தமிழகத்தைப் படைப்பதே தனது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.