BREAKING: அரசு பேருந்து கோர விபத்து… சற்றுமுன் 5 பேர் பலி… தமிழகத்தில் அதிர்ச்சி…!

By Nanthini on பங்குனி 20, 2026

Spread the love

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் அதிவேகமாகச் சென்று அங்கு வந்த பைக் மற்றும் மினி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சிக்கி ஐந்து பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன; அதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் தாறுமாறாகப் பாய்ந்து மற்ற வாகனங்களைச் சிதைக்கும் காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்கின்றன.