பெட்ரோல் தட்டுப்பாடு.. விலைவாசி உயர்வு.. ஈரானின் ஒற்றை முடிவால் இருளில் மூழ்கும் உலக நாடுகள்… நடுங்கும் அமெரிக்கா..!!

By Soundarya on பங்குனி 20, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடுத்துள்ள போர் 20 நாட்களைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் மிக முக்கியமான இந்தப் பாதையை ஈரான் முடக்கியிருப்பது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் போர்க்களத்தில் மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ஈரானின் இந்த அதிரடி வியூகம் உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள் ஈரானின் சில பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், ஈரான் இவ்வளவு காலம் போரில் தாக்குப்பிடிக்கும் என்று அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் மூலம், ஈரான் சர்வதேச நாடுகளின் ‘பொருளாதார நரம்பை’ தன் வசம் பிடித்துள்ளது. ஈரானின் இந்தத் துணிச்சலான நடவடிக்கை, போரின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்துள்ளதுடன், அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு ஒரு சவாலாகவும் உருவெடுத்துள்ளது.

   

இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலகளாவிய விநியோகச் சங்கிலி (Global Supply Chain) நிலைகுலைந்து போயுள்ளது. இதன் நேரடி விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை வரலாறு காணாத வகையில் விண்ணைத் தொட்டுள்ளது. பல நாடுகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலைவாசி உயர்வால் அமெரிக்காவின் நட்பு நாடுகளே தற்போது அதிருப்தியில் ஆழ்ந்துள்ளன. ஈரானின் இந்த ‘பொருளாதாரப் போர்’ உலக நாடுகளை ஒரு மிகப்பெரிய நெருக்கடியை நோக்கித் தள்ளியுள்ளது.