நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து சர்ச்சைக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்படும் நபராக நடிகை த்ரிஷா மாறியுள்ளார். சமீபத்தில் சங்கீதா தாக்கல் செய்ததாகக் கூறப்படும் மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அந்த நடிகை த்ரிஷாதான் என்று ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்லத் திருமண விழாவிற்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து, ஒரே காரில் வந்து இறங்கியது இந்தச் சர்ச்சையை மேலும் உறுதிப்படுத்துவது போல் அமைந்தது. இதனால் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலரும் த்ரிஷா-விஜய் குறித்துத் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
விஜய் உடனான இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், த்ரிஷாவின் கடந்தகாலக் காதல் வாழ்க்கை குறித்தும் இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தெலுங்கு சினிமாவில் த்ரிஷா பிஸியாக இருந்தபோது, நடிகர் ராணா டகுபதியை அவர் காதலித்ததாகப் பலமாகப் பேசப்பட்டது. ராணா டகுபதி தெலுங்குத் திரையுலகின் மிகவும் செல்வாக்கு மிக்க ராமநாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவர். நடிகர் வெங்கடேஷ் இவரது சித்தப்பா மற்றும் நாகார்ஜுனா குடும்பத்தினர் இவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் ஆவர். மிகவும் பாரம்பரியமான இந்தக் குடும்பத்தினர், தங்கள் குடும்ப உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த பிடிவாதமாக இருப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
ராணா மற்றும் த்ரிஷாவின் காதல் முறிந்ததற்கான பின்னணி குறித்துப் பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றன. ராணாவின் குடும்பப் பாரம்பரியம் மற்றும் கௌரவம் காரணமாக, த்ரிஷாவுடனான காதலை அவரது குடும்பத்தினர் முற்றிலுமாக எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நாக சைதன்யா – சமந்தா திருமணத்தைக் கூட நாகார்ஜுனா குடும்பம் ஏற்கவில்லை என்றும், சைதன்யாவின் பிடிவாதத்தாலேயே சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ராணா விவகாரத்தில் குடும்பத்தின் அழுத்தத்தால் இந்தக் காதல் ஆரம்பத்திலேயே முறிக்கப்பட்டதாகச் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இந்த பழைய தகவல்கள் தற்போது விஜய்யுடனான சர்ச்சைக்கு இடையே மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
