இன்ஸ்டாகிராமில் பழகி காதல்…! 5 மாத கர்ப்பிணியாக உள்ள 14 வயது சிறுமி… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

By Devi Ramu on பங்குனி 18, 2026

Spread the love

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண் விஜய் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இருவரும் அடிக்கடி அருண் விஜயின் வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது அருண் விஜய் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த சிலர் நாட்களாக சோர்வாக இருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து விசாரித்த போது அருண் விஜயுடன் பழகியதை மாணவி கூறியுள்ளார். இது குறித்து காவல்நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அருண் விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.