“வாட்டர் பாட்டில் நாற்றம் அடிக்குதா…? கவலையை விடுங்க…! பேக்கிங் சோடா இருந்தா போதும்… சிம்பிள் ட்ரிக்ஸ் இதோ…!!

By Devi Ramu on பங்குனி 18, 2026

Spread the love

வாட்டர் பாட்டிலை நீண்ட நாட்கள் கழுவாமல் பயன்படுத்தும்போது அதில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்ந்து மோசமான துர்நாற்றம் வீசக்கூடும். இதனைப் போக்க ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால், பாட்டிலில் உள்ள அமில வாசனை மூலக்கூறுகள் நீங்கும். அதேபோல், சரிபாதி வெள்ளை வினிகர் மற்றும் மீதி வெதுவெதுப்பான நீர் கலந்து இரவு முழுவதும் ஊறவைப்பதன் மூலம் கிருமிகள் அழிந்து பாட்டில் சுத்தமாகும்.

பாட்டில்களைக் கழுவிய பிறகு ஈரப்பதம் இல்லாமல் சூரிய ஒளியில் நன்கு உலர்த்துவது நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கும். குறிப்பாக, புரோட்டீன் ஷேக் அல்லது ஜூஸ் போன்ற பானங்களை ஊற்றி வைத்திருந்தால் உடனுக்குடன் சுத்தம் செய்வது அவசியம். பாட்டிலின் உட்புறம் அதிக கீறல்கள் இருந்தாலோ அல்லது சுத்தம் செய்த பிறகும் நாற்றம் நீடித்தாலோ, ஆரோக்கியம் கருதி அந்தப் பழைய பாட்டிலை மாற்றிவிட்டு புதியதைப் பயன்படுத்துவதே சிறந்தது.