FLASH NEWS: “7 EX அமைச்சர்கள்.. 186 கோடி சொத்து”… அதிமுக மாஜிக்களை குறிவைத்த திமுகவின் மூவ்… அமலாக்கத்துறை விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு…!

By Nanthini on பங்குனி 18, 2026

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஏழு பேர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தொடரப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்குகளை, அமலாக்கத்துறை (ED) வசம் ஒப்படைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.பி. கிரிராஜன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், சி. விஜயபாஸ்கர், ஆர். காமராஜ் மற்றும் கே.சி. வீரமணி ஆகியோர் மீதான புகார்களில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது போன்ற பணமோசடி தொடர்பான அம்சங்கள் இருப்பதால், மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை விசாரிப்பதே முறையானதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.