செங்கல்பட்டு அருகே பேட்டரி வாங்குவதில் ஏற்பட்ட சிறு வணிகத் தகராறு, வாலிபர் ஒருவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ளது. ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர், அஜித் என்பவரின் கடையில் வாங்கிய பேட்டரி தரமற்றதாக இருந்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையின் கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் அஜித் மற்றும் அவரது நண்பர்கள், செட்டிபுண்ணியம் பகுதியில் சந்துருவை வழிமறித்து அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லைப் போட்டும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கொலையாளிகள் இருவரும் எவ்வித பயமுமின்றி நேராகக் காவல் நிலையம் சென்று “நாங்கள் தான் கொலை செய்தோம்” எனச் சரணடைந்தது போலீசாரையே அதிரவைத்துள்ளது. மதுபோதையில் இருந்த அஜித் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோரைப் பிடித்த போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு சிறிய வியாபாரத் மோதல் கொலையில் முடிந்ததும், குற்றவாளிகள் துணிச்சலாகச் சரணடைந்ததும் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
