“கியூபா எங்களுடையது.. அதில் கைவைத்தால்” அமெரிக்காவிற்கு ரஷ்யா விடுத்த பகீர் எச்சரிக்கை.. உலக அரசியலில் மீண்டும் ஒரு ‘கியூபா ஏவுகணை’ நெருக்கடியா..?

By Soundarya on பங்குனி 18, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கியூபாவை ஏதோ ஒரு வகையில் “கைப்பற்ற” (Takeover) திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபா தற்போது கடும் பொருளாதார நெருக்கடியையும், மின்சாரத் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாடு மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், தான் நினைப்பதைச் செய்ய முடியும் என்றும் ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபா மீதான மிரட்டல் அல்லது பிளாக்மெயில் செய்யும் மொழியை ஏற்க முடியாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், கியூபா அரசிற்கும் மக்களுக்கும் ரஷ்யா என்றும் துணை நிற்கும் என்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.

   

கியூபாவின் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யா, அந்நாட்டிற்குத் தேவையான அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளது. வாஷிங்டனுக்கும் ஹவானாவுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க ராஜதந்திர ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.