ஒரு நபர் மாலையில் வாங்கி வந்த தர்பூசணி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் வெளித்தோல் காகிதத்தைப் போல உதிர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்பூசணி போன்ற இயற்கை கனிகள் அதன் இயல்பான தன்மையை இழந்து, பிளாஸ்டிக் அல்லது காகித உறையைப் போலத் தோல் உரிவது என்பது அதில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயன பூச்சுகளையே (Chemical coatings) வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பழங்கள் பளபளப்பாகத் தெரிவதற்கும், நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்கும் மெழுகு போன்ற ஆபத்தான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவது நுகர்வோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
A man bought a watermelon in the evening.
He kept it in the fridge for a while.
After some time, the outer layer started peeling off like paper.
This raises simple questions to govt.
Is anything truly pure available anymore, or are we just consuming chemicals in the name of… pic.twitter.com/nSie3cUlRs
— Oppressor (@TyrantOppressor) March 18, 2026
இந்தச் சம்பவம் அரசு நிர்வாகத்தின் மீதும், உணவுப் பாதுகாப்புத் துறையின் மீதும் பல கேள்விகளை எழுப்புகிறது. சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் முறையாகப் பரிசோதிக்கப்படுகின்றனவா? லாப நோக்கத்திற்காக மக்களின் உயிரோடு விளையாடும் வணிகர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? சத்துக்காக நாம் உண்ணும் உணவே விஷமாக மாறும் அவலம் தொடர்வது, சாமானிய மக்களின் உடல்நலத்தைப் பெரும் கேள்விக்குறியாக்குகிறது. உணவுப் பாதுகாப்பு விதிகள் காகித அளவில் மட்டுமே இருக்கிறதா என்ற ஆதங்கம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இன்று நாம் உண்ணும் உணவில் எதுதான் சுத்தமானது என்ற கவலை ஒவ்வொரு வீட்டிலும் நிலவுகிறது. இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை விட, ரசாயனங்களால் மெருகூட்டப்பட்ட உணவுகளே சந்தையை ஆக்கிரமித்துள்ளன. உணவின் பெயரால் நாம் வெறும் ரசாயனங்களையே உட்கொள்கிறோமா என்ற சந்தேகம் வலுக்கிறது. இனியாவது அரசு விழிப்புடன் செயல்பட்டு, சந்தைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு கலப்படமற்ற தூய்மையான உணவு மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
