சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த திகிலூட்டும் வீடியோ, சாகச விரும்பிகளையும் பொதுமக்களையும் ஒரு நிமிடம் உறைய வைத்துள்ளது. ஒரு பெண் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு கவசங்களுடன் ஒரு ஆற்றின் மேலே அமைக்கப்பட்டிருக்கும் ஜிப்லைனில் (Zipline) வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறார். பொதுவாக இது போன்ற சாகசச் செயல்கள் உற்சாகத்தைத் தரும் என்றாலும், அந்தப் பெண்ணுக்குக் காத்திருந்தது ஒரு பயங்கரமான அதிர்ச்சி.
View this post on Instagram
அந்தப் பெண் ஜிப்லைனில் ஆற்றைக் கடக்கும்போது, திடீரென ஆற்றுக்குள்ளிருந்து ஒரு ராட்சத முதலை மின்னல் வேகத்தில் மேலே பாய்ந்தது. அந்தப் பெண்ணைப் பிடிப்பதற்காகத் தனது தாடைகளை விரித்தபடி அந்த முதலை உயரே குதித்த காட்சி, பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. நல்லவேளையாக, ஜிப்லைன் போதுமான உயரத்தில் இருந்ததால் முதலையிடம் இருந்து அந்தப் பெண் நூலிழையில் உயிர் தப்பினார். முதலையால் அவரை எட்ட முடியாமல் மீண்டும் தண்ணீருக்குள்ளேயே விழுந்தது.
இந்தக் காட்சிகள் ஹாலிவுட் த்ரில்லர் படங்களில் வரும் காட்சிகளைப் போலவே மிகவும் பயங்கரமாக உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “ஒருவேளை ஜிப்லைன் சற்று தாழ்வாக இருந்திருந்தால் அந்தப் பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்?” என்று நெட்டிசன்கள் பலரும் அச்சத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், சிலர் இது தொழில்நுட்ப உதவியுடன் (AI) உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
