இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ்வதற்காகப் போராடும் விதம் ஆச்சரியமானது. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு கழுகின் வேட்டை வீடியோ, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கூர்மையான பார்வையும், மின்னல் வேகமும் கொண்ட கழுகுகள் வேட்டையாடுவதில் வல்லவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த வீடியோவில் ஒரு கழுகு செய்த செயல் அசாத்தியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாக கழுகுகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், நீருக்கு அடியில் நீந்தும் சிறு மீன்களைக் கூடத் துல்லியமாகக் கணிக்கும் திறன் கொண்டவை. “கழுகுப் பார்வை” என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழும் இந்த உயிரினம், இந்த வீடியோவில் தனது இலக்கை நோக்கி சீறிப் பாய்வதைக் காணலாம். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சரி, தனது இரையைத் தவறவிடாமல் பிடிப்பதில் கழுகுகள் கில்லாடிகள் என்பதை இக்காட்சி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்த வைரல் வீடியோவில், நீர் நிலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு, திடீரென மின்னல் வேகத்தில் தண்ணீருக்குள் பாய்கிறது. சில நொடிகள் தண்ணீருக்குள் அமர்ந்தது போன்ற நிலையில் இருந்த கழுகு, மீண்டும் மேலே எழும்பும் போது ஒரு மீன் அல்ல, மாறாக தனது இரண்டு கால்களிலும் தலா ஒரு மீன் என மொத்தம் இரண்டு மீன்களுடன் வானில் பறக்கிறது. ஒரே முயற்சியில் இரண்டு இரைகளை வீழ்த்திய கழுகின் இந்த அசாத்தியத் திறன் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒரே முயற்சியில் இரண்டு மீன்களை வேட்டையாடிய கழுகின் நுணுக்கமானத் திறமையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் இந்த அபூர்வ காட்சியைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
