Blood Test எடுக்க வந்தவருக்கு காத்திருந்த ஷாக்.. தனிமையில் இளம்பெண் செய்த லீலைகள்… புது விதமாக அரங்கேறும் ‘ஹனி ட்ராப்’ மோசடிகள்..!!

By Soundarya on பங்குனி 17, 2026

Spread the love

குர்கானில் ரத்தப் பரிசோதனைக்காகச் சென்ற இளைஞரைத் திட்டமிட்டு மிரட்டி பணம் பறித்த இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண், ரத்த மாதிரி (Blood Sample) எடுக்க வேண்டும் என்ற சாக்கில் இளைஞரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர் வீட்டிற்குச் சென்றபோது, அந்தப் பெண் இளைஞருடன் கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளார்.

பின்னர், அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய அந்தப் பெண், இளைஞரிடமிருந்து பல லட்ச ரூபாயைப் பறித்துள்ளார். மிரட்டல் தாங்க முடியாத அந்த இளைஞர், இறுதியில் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி, அந்த இளம்பெண்ணின் இருப்பிடத்தைச் சோதனையிட்டனர்.

   

இந்தச் சோதனையின் போது, அந்தப் பெண்ணுடன் சேர்ந்து இந்தச் சதியில் ஈடுபட்ட மேலும் இரண்டு இளைஞர்களையும் போலீஸார் பிடித்துள்ளனர். இந்த கும்பல் திட்டமிட்டே இளைஞர்களைத் தேடிப் பிடித்து இது போன்ற “ஹனி ட்ராப்” (Honey Trap) வலைகளில் வீழ்த்திப் பணம் பறித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது போலீஸார் அந்தப் பெண் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.