தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் நேரில் சந்திக்க உள்ளார். முன்னதாக சசிகலாவும் ராமதாஸைச் சந்தித்துப் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்தும், எத்தனை தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடும் என்பது குறித்தும் ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
