தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாமகவின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவிக்க உள்ளார். நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவுடன் கரம் கோர்ப்பதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் புதிய கூட்டணியை உருவாக்குவதா என்பதில் நிலவி வந்த குழப்பங்களுக்கு இடையில், கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி உறுதிப்படுத்தியுள்ளார். நீண்ட இழுபறிக்குப் பின் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு, தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
