BREAKING: அதிமுக- தவெக கூட்டணியா? அதிகாரப்பூர்வ விளக்கம்… சற்றுமுன் பரபரப்பு…!!

By Muthu Mani on பங்குனி 14, 2026

Spread the love

அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப்போவதாகவும், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு துணை முதலமைச்சர் (DCM) பதவி மற்றும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் பரவி வரும் செய்திகளுக்கு தவெக பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் முக்கிய மக்கள் பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே திட்டமிட்டு இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகச் சாடியுள்ள அவர், கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிவிப்புகளைத் தவிர, மற்ற எந்தத் தகவல்களையும் தவெக தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனத் திட்டவட்டமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.