சர்வதேச போர் சூழலால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், சமையல் எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் அதிரடியாக உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்க மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அத்தியாவசியத் தேவையான பாமாயில் லிட்டருக்கு ₹110-லிருந்து ₹122 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ₹155-லிருந்து ₹175 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மேலும், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலையும் தலா ₹5 வரை அதிகரித்துள்ளதால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் திணறி வரும் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் இந்த நிச்சயமற்ற சூழல் நீடிக்கும் பட்சத்தில், சமையல் எண்ணெயின் விலை இன்னும் உயருமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், அரசு சந்தை விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது.
