BREAKING: டெல்லி செல்லும் தவெக தலைவர் விஜய்…. கூட்டணியில் திடீர் திருப்பம்..?

By Soundarya on பங்குனி 14, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்காக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் இரண்டு முறை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான விளக்கங்களை அளித்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆஜராக உள்ளார். இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் விஜய்யின் டெல்லி பயணம், விசாரணையைத் தாண்டி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

   

இந்த டெல்லி விசிட்டின் போது, விஜய் பாஜகவின் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம் அல்லது கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.