அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி… நடுவானில் எரிபொருள் நிரப்பிய விமானம் திடீர் மாயம் – 4 வீரர்கள் பலி…. உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்….!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

ஈராக்கில் அமெரிக்கப் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ‘KC-135’ ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியுள்ளது. இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேரில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், மற்ற 2 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இது எதிரிகளின் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது தற்செயலான விபத்தாகவே இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை நிறைவடைந்ததும் உயிரிழந்த வீரர்களின் அடையாளம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   

இருப்பினும், இந்த விபத்து தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே இந்த விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், அமெரிக்கா உண்மையை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

   

அமெரிக்காவின் இந்த KC-135 ரக விமானங்கள், வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களிலிருந்து புறப்படும் F-15, F-16 மற்றும் F-35 ரக போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை நடுவானில் வழங்குகின்றன. தற்போது நிகழ்ந்துள்ள இந்த விபத்து, ஏற்கனவே பதற்றமான சூழலில் இருக்கும் வளைகுடா பிராந்தியத்தில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.