“எனக்கு அவன் கூட ஜாலியா இருக்கனும்”…. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு… இறுதியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்….!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் க.மாமந்தல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராபின் மற்றும் அம்மு தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அம்முவுக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான பழக்கத்தினால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் அந்தோணி ராபினுக்கு தெரிந்ததால், அவர் அம்முவை கண்டித்து வந்துள்ளார்.

இதன் விளைவாக, கடந்த 8-ஆம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த அந்தோணி ராபினுக்கும், அம்முவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அம்மு, தனது கணவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றியுள்ளார். சுதாரித்துக்கொண்டு வெளியே ஓடிய அந்தோணி ராபினைத் துரத்திச் சென்று, பொது இடத்தில் வைத்து அவர் மீது தீ வைத்து எரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

   

சம்பவத்திற்குப் பிறகு, கணவர் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதாக அம்மு நாடகமாடியுள்ளார். சிகிச்சைக்காக கணவரை மருத்துவமனையில் சேர்த்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், அம்முவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

   

போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அம்மு உண்மையை ஒப்புக்கொண்டார். கணவர் அந்தோணி ராபின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தையடுத்து, போலீசார் அம்முவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளத்தொடர்பு ஒரு குடும்பத்தை எப்படி அழித்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சோகமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.