அஜித்திற்கு உலகின் முதல் Formula E Themed SUV கார் பரிசு… AK-வின் ரேசிங் வெறிக்கு மகிந்திரா கொடுத்த கௌரவம்..!!

By Soundarya on பங்குனி 13, 2026

Spread the love

பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் (AK) அவர்களுக்கு, மகிந்திரா நிறுவனம் தனது பிரத்யேக ‘BE FORMULA E EDITION’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது. அஜித் குமார் திரையுலகைத் தாண்டி கார் பந்தயங்களில் (Racing) கொண்டுள்ள அலாதி ஆர்வத்தையும், அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டும் விதமாக இந்த கார் வழங்கப்பட்டுள்ளது.

மகிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர். வேலுசாமி அவர்கள், அஜித்தின் ரேசிங் ஆர்வத்தை கௌரவிக்கும் வகையில் இந்தச் சிறப்பு பதிப்பு காரை வழங்கினார். ‘Formula E’ தொழில்நுட்பத்தில் உருவான இந்த அதிநவீன மின்சார கார் (EV), பந்தயக் களத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

   

சமீபகாலமாக அஜித் குமார் தனது சொந்த ரேசிங் அணியைத் தொடங்கி, சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்கத் திட்டமிட்டு வருகிறார். இந்தச் சூழலில் மகிந்திரா நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ள இந்தப் பரிசு, அவரது ரேசிங் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.