“பாவம் விஜய் பச்ச குழந்தை” அவருக்கு என்ன தெரியும்..? 40 வயசு த்ரிஷா மேல தான் தப்பு… தாறுமாறாக கலாய்த்த பிரபல மருத்துவர்..!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பான திருமண நிகழ்வு குறித்த சர்ச்சையில், த்ரிஷா அந்த நிகழ்விற்குச் சென்றிருக்கக் கூடாது என நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குந்தவை (த்ரிஷா) “வீட்டிலேயே குந்த வைக்கப்பட்டால் நல்லது” என பார்த்திபன் மேடையில் பேசியது, த்ரிஷாவை முடக்கும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், த்ரிஷாவும் இது ஒரு முட்டாள்தனமான கருத்து என மறைமுகமாகப் பதிவிட்டிருந்தார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Dr. Isacc Abbas (@dr.isaccabbas)

இந்த விவகாரம் குறித்து நீண்ட விளக்கம் அளித்த பார்த்திபன், தனது பேச்சு த்ரிஷாவிற்கு எதிரானது அல்ல என்றும், விஜய் மீதான அதீத அக்கறையினால் விளைந்த ஆதங்கம் என்றும் குறிப்பிட்டார். கரூர் போன்ற அரசியல் பிரச்சனைகளை விட, இந்த திருமண நிகழ்வு விஜய்க்கு அதிக விமர்சனங்களை தேடித்தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். த்ரிஷா அந்த நிகழ்வைத் தவிர்த்திருந்தால் இத்தகைய நெருக்கடிகள் விஜய்க்கு ஏற்பட்டிருக்காது என்பதே பார்த்திபனின் வாதமாக இருந்தது.

   

இருப்பினும், இந்த விவகாரத்தில் த்ரிஷாவை மட்டுமே குறை கூறுவதை ஏற்க முடியாதென சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவறு அல்லது விமர்சனம் என்று வரும்போது அது இருவருக்கும் பொதுவானது என்றாலும், திரை பிரபலங்கள் பலரும் த்ரிஷாவையே குறிவைத்து அறிவுரை கூறி வருவது ஒருதலைப்பட்சமானது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, விஜய்க்கு இருக்கும் பொறுப்பு குறித்து யாரும் பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் டாக்டர் ஐசக் அப்பாஸ் (Dr. Isacc Abbas) வெளியிட்டுள்ள ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்த்திபன் உள்ளிட்டோர் த்ரிஷாவைச் சாடி வரும் வேளையில், டாக்டர் ஐசக் தனது பாணியில் மருத்துவ உதாரணங்களைக் கொண்டு மறைமுகமாகவும் நகைச்சுவையாகவும் விஜயைக் கலாய்த்துப் பேசியுள்ளார். த்ரிஷாவிற்கு ஆதரவாகவும், ஒருதலைப்பட்சமாக கருத்து கூறுபவர்களுக்கு பதிலடியாகவும் அமைந்துள்ள இந்தக் காணொளி தற்போது லைக்குகளைக் குவித்து வருகிறது.