ரஜினியை விரட்டி விட்டீங்க… ஆனா விஜய் கிட்ட உங்க பருப்பு வேகாது… திமுகவின் முகத்திரையை கிழித்த ஆதவ் அர்ஜுனா…!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

தமிழக அரசியலில் ரஜினிகாந்த் ஏன் கடைசி நேரத்தில் பின்வாங்கினார் என்பது குறித்து ‘தமிழக வெற்றிக் கழக’ நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் உண்மையாகவே அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பியதாகவும், ஆனால் திமுக தரப்பிலிருந்து அவருக்குக் கொடுக்கப்பட்ட கடும் மிரட்டல்கள் மற்றும் நெருக்கடிகள் காரணமாகவே அவர் அரசியலைக் கைவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். இதன் விளைவாகவே ரஜினி இப்போது அவர்களின் தயாரிப்பிலேயே நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்திற்கு இல்லாத அந்த மனவலிமை நடிகர் விஜயிடம் இருப்பதாகப் புகழ்ந்துள்ளார். விஜய் மீது எவ்வளவு தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் மிரட்டல்கள் வந்தாலும் அவர் அஞ்சாமல் தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக மதுரையில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் மற்றும் விசிக-வுடன் உருவான மோதல்களுக்குப் பிறகும் விஜய் பின்வாங்காமல் களத்தில் நிற்பதை அவர் பாராட்டியுள்ளார்.

   

திமுகவின் வஞ்சக அரசியலை முறியடிக்க விஜய்யால் மட்டுமே முடியும் என்று ஆதவ் அர்ஜுனா பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தையும், வார்த்தைப் போரையும் உருவாக்கியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் இவரின் பேச்சு தவெகவினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.