தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுகளை முழுமையாக முடித்துள்ள ஆணையம், அடுத்த சில நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியானவுடன், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பதால், அரசியல் கட்சிகள் மற்றும் நிர்வாகத் தரப்பில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
