“உங்களுக்குக் கணவர் தேவையில்லை, 100 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு வீட்டு வேலைக்காரர் தான் தேவை போல”… மீனாட்சி சவுத்ரியை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்..!!!

By Rajeshwari on பங்குனி 10, 2026

Spread the love

விஜய்யின் ‘கோட்’ மற்றும் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக உயர்ந்திருப்பவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது வருங்கால கணவர் குறித்து சில வினோதமான மற்றும் ஆச்சரியமான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

மேலும் தனக்கு வரப்போகும் கணவருக்குக் குறைந்தது 100 ஏக்கர் நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்றும், அவர் வசதி படைத்தவராக இருப்பதுடன் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

   

இது குறிப்பாக, சமையல் செய்வது, துணி துவைப்பது மற்றும் ஆடைகளை அயர்ன் செய்வது போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் அடுத்தவரை எதிர்பார்க்காமல் அவரே பொறுப்பாகச் செய்ய வேண்டும் என்று மீனாட்சி ஜாலியாகக் கூறியுள்ளார்.

   

இதனால் இவரின் இந்த எதிர்பார்ப்புகளைக் கண்ட நெட்டிசன்கள், “உங்களுக்குக் கணவர் தேவையில்லை, 100 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு வீட்டு வேலைக்காரர் தான் தேவை போல” எனச் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். மீனாட்சியின் இந்த வினோத ஆசை தற்போது இணையத்தில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.