“ஈரான் இனி எழவே முடியாது.. 20 மடங்கு கடுமையாகத் தாக்குவோம்”…. டிரம்பின் பகிரங்க எச்சரிக்கையால் உலகமே அதிர்ச்சி….!

By Nanthini on பங்குனி 10, 2026

Spread the love

அமெரிக்காவுடனான மோதலுக்குப் பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள சூழல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா பகுதியில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசிய சரக்குகளுடன் 1,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சிக்கியுள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பது, சர்வதேசப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் அதிரடியான எச்சரிக்கையை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலையும் ஈரான் தடுக்கும் பட்சத்தில், அதுவரை கண்டிராத மிகக்கடுமையான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். ஈரானின் எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதனால் அந்த நாடு மீண்டு வர முடியாத நிலையைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மரணம், தீ மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என்று அவர் விடுத்திருக்கும் இந்த மிரட்டல், போர் அபாயத்தை அதிகரித்துள்ளது.

   

இருப்பினும், இந்த நடவடிக்கையைத் தற்காப்பு நடவடிக்கையாக முன்வைக்கும் டிரம்ப், இது சீனாவின் நலன்களுக்காகவும், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் பிற நாடுகளின் பாதுகாப்பிற்காகவும் எடுக்கப்பட்ட முடிவாகக் குறிப்பிடுகிறார். வளைகுடாப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றமான சூழல், அமைதியான முறையில் முடிவுக்கு வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், இதற்காகப் பிரார்த்திப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.