CSK-வில் இணையும் “SRS” மெகா கூட்டணி…! உலக கோப்பை வெற்றியால் தோனி படைக்கு அடித்த ஜாக்பாட்… குஷியில் ரசிகர்கள்…!!

By Devi Ramu on பங்குனி 9, 2026

Spread the love

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது, சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்கு ஐபிஎல் தொடரில் பெரும் பலத்தை அளித்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோர் தற்போது அசுர வேக ஃபார்மில் இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் மற்றும் ஆல்-ரவுண்டராக ஜொலிக்கும் சிவம் துபே ஆகியோருடன் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இணைவதால், இந்த ‘SRS’ (Sanju, Ruturaj, Shivam) கூட்டணி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடியாக ரன்களைக் குவிக்கும் சஞ்சு, நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடும் ருதுராஜ், மற்றும் இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிடும் சிவம் துபே ஆகிய மூவரும் சிஎஸ்கே பேட்டிங் வரிசையை வலிமையாக்கியுள்ளனர். பந்துவீச்சிலும் சிவம் துபே விக்கெட்டுகளை வீழ்த்துவது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. உலக கோப்பையில் பெற்ற அனுபவத்துடன் இந்த வீரர்கள் களம் காணுவதால், 2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 6-வது கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த மிரட்டலான கூட்டணியை எதிர்கொள்ள முடியாமல் மற்ற அணிகள் இப்போதே கலக்கத்தில் உள்ளன.